தமிழகம்

டிவி சேனல் மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு! மனைவியை கத்தியால் பலமுறை குத்திய கணவர்

Summary:

Man stabbed wife for tv channel

சென்னை, திருவல்லிக்கேணியில் டிவி சேனலை மாற்றாத கணவரை மணைவி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக அனைத்து வீடுகளிலுமே டிவி சேனல்களை மாற்றுவதில் எப்போதுமே ஒரு தகராறு இருந்துகொண்டே தான் இருக்கும். ஆனால் அந்த வாக்குவாதம் சில நேரங்களில் சரியாகிவிடும். ஆனால் சென்னையில் கத்திக்குத்து வரை சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று சென்னை, திருவல்லிக்கேணி அயோத்தி நகரை சேர்ந்த 50 வயதான மீனவர் வீரன் என்பவர் தனது வீட்டில் டிவி பார்த்துள்ளார். இவர் பழைய படப்பாடல்களை ரசித்து பார்த்துள்ளார். அந்த சமயத்தில் 47 வயதான இவரது மனைவி உஷா, வேறு ஒரு சேனலை வைக்கும்படி அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் வீரன் சேனலை மாள
மாற்ற மறுத்து ரிமோட்டை தன்னோடு வைத்துக்கொண்டார். 

இதனால் கோபமடைந்த உஷா, வீரனை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அவரிடமிருந்து ரீமோட்டை பறிக்க முயற்சித்துள்ளார். அப்போது கோபத்தில் வீரன், மனைவியை தள்ளிவிட்டார். எதிர்பாராதவிதமாக உஷாவின் கால் மேஜையில் அடிபடவே அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. 

அதனைத் தொடர்ந்து மேலும் கோபமடைந்த உஷா, வீரனை கண்ணத்தில் அறைந்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற வீரன், சமையலறையிலிருந்த கத்தியை எடுத்துவந்து உஷாவின் மார்பு, வயிறு, கழுத்து ஆகிய பகுதிகளில் சராமாரியாக குத்தியுள்ளார். 

வலியால் துடித்த உஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து வீரனை தடுத்து நிறுத்தினர். மேலும் படுகாயமடைந்த உஷாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் தகவலறிந்த காவல் துறையினர் வீரனை கைது செய்தனர். 


Advertisement