தமிழகம்

இளம் பெண்ணுடன் திகட்ட திகட்ட உல்லாசம்..! ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த நபருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை.!

Summary:

Man punished by court who abused girl

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள  முத்துகிருஷ்ணாபுரத்தில் வசித்துவருபவர்  பொன்ராஜ்.  இவர் ஆண்டிபட்டி பகுதியில் கட்டிட வேலை செய்து வருபவர். அப்போது அங்கு வேலை பார்க்கும் பெண்ணை மயக்கி கள்ளகாதல் தொடர்பு வைத்திருந்தார். தனக்கு திருமணமானதை மறைத்து, அங்கு வேலை செய்த பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பல முறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் அதை நம்பி அவருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.

இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருந்தநிலையில் அவருக்கு திருமணம் ஆனதை அறிந்த அப்பெண் மனம் உடைந்து  ஆண்டிப்பட்டி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. அந்த பெண்ணை ஏமாற்றியதால் பொன்ராஜுக்கு 10 வருட சிறைத்தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபாரதமும் விதிக்கப்பட்டது. 

அதில் 50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் குழந்தையின் படிப்பு செலவிற்காக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த தொகையை பொன்ராஜ் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைதண்டனை  அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Advertisement