தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
வீட்டுவாடகை கேட்ட உரிமையாளர்..! ஓட ஓட விரட்டிக்கொலை செய்த இளைஞர்..! சென்னையில் நடந்த பயங்கரம்.!
சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரை, அந்த வீட்டில் குடியிருந்த இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர், பண்டார தெருவில் வசித்துவந்தவர் ஓய்வு பெற்ற வாங்கி ஊழியர் குணசேகரன்(50). இவர் அதே பகுதியில் வீடு சொந்தமாக வீடு ஒன்றை கட்டி அதில் ஒரு பகுதியில் தனது குடும்பத்துடன் குணசேகரன் வசித்துவந்தநிலையில், மற்றொரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார்.
அந்த வீட்டில் அஜித் என்ற 21 வயது இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவித்துவரும் அஜித்தின் குடும்பம் கடந்த நான்கு மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் குணசேகரன் வீட்டு வாடகை தருமாறு அஜித் குடும்பத்திடம் தகராறு செய்துள்ளார். வெளியே சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்த அஜித்திடம் குடும்பத்தினர் வாடகை விவகாரம் குறித்து தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த அஜித் இரவு நேரத்தில் வீட்டின் உரிமையாளர் குணசேகரன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் கோவத்தின் உச்சிக்கே சென்ற அஜித், தான் மறைத்துவந்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனை குத்தியுள்ளார். அஜித்திடம் இருந்து தப்பிக்க குணசேகரன் சாலையில் ஓடியுள்ளார். அப்போதும் விடாமல் பின்தொடர்ந்து சென்று அஜித் குணசேகரனை பலமுறை குத்தியுள்ளார். இதில் குணசேகரன் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குணசேகரனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அஜித்தை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.