தமிழகம்

அடக்கொடுமையே! டிக்டாக் லைக்கிற்காக இப்படியா? இளைஞன் செய்த மோசமான காரியம்! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

Summary:

Man killed cat for tiktok likes

தற்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிக் டாக் மோகத்திற்கு அடிமையாக உள்ளனர். மேலும் டிக்டாக்கில் லைக் பெறுவதற்காகவே பலர் மோசமான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் நெல்லை மாவட்டம், பழவூர் அருகே செட்டிகுளம் என்ற பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். டிக்டாக் மோகம் கொண்ட இவர் லைக்கிற்காக தனது தந்தையின் பண்ணையிலுள்ள மாடுகளை வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டு வந்துள்ளார். ஆனால் அவற்றில் அவருக்கு லைக் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தங்கராஜ் தனது வீட்டில் வளர்த்து வந்த பூனை ஒன்றை தூக்கில் மாட்டிவிட்டு, அதனை வீடியோ எடுத்து டிக்டாக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இதனை கண்ட  காவல்துறையினர் தங்கராஜ்  வீட்டிற்கு சென்று பூனையை சித்ரவதை செய்து, கொலை செய்ததால் அவரை  மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement