தமிழகம்

தாலியில் ஈரம் காயவில்லை..! திருமணம் முடிந்த 20 நாட்களில் நடைபயிற்சியின் போது உயிரிழந்த புதுமாப்பிள்ளை..! கதறி அழுத மனைவி..! சோக சம்பவம்.!

Summary:

Man dead near kanchipuram after 20 days of marriage

நடைபயிற்சியில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை ஒருவர் இடி தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் அடுத்த கூரம் என்னும் கிராமத்தில் உள்ள அரசமரத்தெருவில் வசிப்பவர் பெருமாள். இவரது மகன் கார்த்தி (25), இவர், பாலுச்செட்டிசத்திரம் பஜாரில் இருசக்கர வாகனங்களுக்காக நிதி வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கார்த்திக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெறுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டிலையே இருந்துவந்த கார்த்தி இன்று காலை 7 மணியளவில் வீட்டின் அருகில் இருக்கும் ஏரிக்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்துவரும் நிலையில், கார்த்தி நடைப்பயிற்சி செய்த பகுதியில் வானத்தில் கருமேகம் சூழ்ந்து இடி தாக்கியுள்ளது. இதையடுத்து கார்த்தி அதே இடத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . கார்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கார்த்தி இறந்த செய்தி கேட்டதும் அவரது புது மனைவி மற்றும் கார்த்தியின் குடும்பத்தினர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.


Advertisement