அந்த மனசுல எம்புட்டு காதல் இருந்திருந்தா மனுஷன் இப்படி செஞ்சிருப்பாரு!! 30 வருஷ பாசம்.. இறந்த மனைவியிடமே சென்ற கணவர்!Man commit suicide after knowing his wife was dead

கட்டிய மனைவி உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல் புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் - உமா தம்பதி. 30 வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்த நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் மற்றும் மகன் இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பாத்துவருகின்றனர்.

இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் உமாவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மருந்து மாத்திரை எடுத்தும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் உமா நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மனைவி இறந்த தகவல் அறிந்ததும், அவரது கணவர் செல்வம் அருகில் இருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 30 வருடங்களாக தன் கூட இருந்து, தனது துக்கம், சந்தோசம் அனைத்தையும் பகிர்ந்துகொண்ட மனைவி இரண்டுவிட்டாலே என்ற சோகத்தில் செல்வம் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடைலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மனைவி இறந்த சோகம் தாங்க முடியாமல் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.