தமிழகம்

இன்ஜினியரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஆபாச படங்களை அனுப்பிய மாணவிகள்.! இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி.!

Summary:

சென்னையில் கல்லூரி மாணவிகளிடம் ஆசைவார்த்தை கூறி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த அருண் கிறிஸ்டோபர்(25) என்பவர் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து மின்சார வாரியத்தில் தற்காலிகமாக வேலை செய்து வந்துள்ளார். ஆனால் உறவினர்களிடம் தான் விமான பைலட்டாக வேலை செய்வதாக இவர் கூறி வந்துள்ளார்.  இந்தநிலையில் அருண்  சமூகவலைத்தளம் மூலமாக இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, காதல் வலை வீசுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். அவ்வாறு வலையில் விழும் இளம்பெண்களை, திருமணம் செய்துகொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி, அப்பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு கூறி வற்புறுத்தி புகைப்படங்களை அனுப்பவைத்துள்ளார்.

இவரது இந்த கொடூர ஏமாற்று காதலுக்கு பல கல்லூரி மாணவிகள் ஏமாந்துள்ளனர். இவரது கொடூர காதல் விளையாட்டில் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சிக்கியுள்ளார். அவரது அந்தரங்க படங்களை ரசித்தது மட்டுமல்லாமல் அவரது தோழியின் புகைப்படத்தையும் அனுப்புமாறு கூறி வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்தார். நீ அவ்வாறு அனுப்பாவிட்டால் உனது அந்தரங்க படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். அவரது மிரட்டலில் பயந்துபோன அந்த கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுபற்றி தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அருண் கிறிஸ்டோபர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இது போல இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். 


Advertisement