தமிழகம்

எல்லை மீறிய டிவி சத்தம்! உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

Man beats father to death in drunken brawl

கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியை அடுத்து சண்முகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்து மனைவிகள் இடையே பிரச்சனை ஆனதை அடுத்து தற்போது மூன்றாவது மனைவியுடன் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிவராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடனும், தனது தந்தையுடனும் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது தந்தையுடன் சேர்ந்து சிவராஜ் அவரது வீட்டில் மது அருந்தியுள்ளார்.

இருவரும் மது அருந்தையில் சிவராஜின் தந்தை அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவராஜ் அங்கிருந்த கம்பி ஒன்றை எடுத்து தனது தந்தையை ஓங்கி அடித்துள்ளார். இதில் வலிதாங்க முடியாமல் சிவராஜின் தந்தை அலறியுள்ளார். தந்தையின் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க தொலைக்காட்சி சத்தத்தை அதிகமா வைத்துள்ளார் சிவராஜ்.

இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் தந்தையின் உடலை எரிக்க சிவராஜ் முற்படும்போது ஏன் டிவி சத்தம் அதிகமாக உள்ளது என அக்கம் பக்கத்தினர் கேட்டுள்னனர். இதற்கு மழுப்பலாக பதிலளித்துவிட்டு டிவி சத்தத்தை குறைக்காமல் சிவராஜ் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இரவு முழுவதும் டிவி சத்தம் அதிகமா இருந்ததால் அக்கம் பக்கத்தினர் காலையில் சென்று சிவராஜ் வீட்டிற்குள் பார்த்தபோது சிவராஜின் தந்தை சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த சிவராஜை தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு மாலையில்  போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement