4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கால்நடை ஊழியர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கால்நடை ஊழியர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!


man arrsted in pocso act in thiruvarur

திருவாரூர் மாவட்டத்தில் 4ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கால்நடை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வண்டாம்பாளை பகுதியை சேர்ந்த பிரபுதாஸ் என்பவர் கால்நடைகளுக்கு தனியார் செயற்கை முறை கருவூட்டல் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், பிரபுதாஸ் பணிக்கு சென்ற பொழுது 4ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனையறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நன்னிலம் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அவரளித புகாரின் அடிப்படையில் பிரபுதாஸ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.