கணவர் செய்த துரோகம்.. குழந்தையை தவிக்கவிட்டு விபரீதம்.. பறிபோன 2 உயிர்கள்.!



Man Allegedly Kills Wife Before Dying by Suicide in West Bengal

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவால் குழந்தை அனாதையானது.

தம்பதி:

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டம், ரிஷிரா பகுதியில் வசித்து வருபவர் தீபங்கர் சர்க்கார் (வயது 39). இவரின் மனைவி மோனிகா சர்க்கார் (வயது 31). தம்பதிகள் நதுண்கிராம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இதனிடையே, நேற்று இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. 

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!

illegal affair

தாயின் உடல் அருகே..

பின் மறுநாள் காலையில் வேலைக்கு வரும் பெண் வீட்டுக்கு வந்தபோது, மோனிகா ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மோனிகாவின் மரணத்தை உறுதி செய்தனர். தாயின் சடலம் அருகே 7 வயது மகள் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

illegal affair

கணவரும் தற்கொலை:

சிறுமியை மீட்டு பாட்டி வீட்டுக்கு அழைத்துத் சென்ற அதிகாரிகள், தலைமறைவான தீபங்கரை தேடினர். அப்போது, அவர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தீபங்கருக்கு திருமணமான வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் கணவன் - மனைவி இடையே சண்டை நடந்துள்ளது. அது தொடர்பான வாக்குவாதம் சம்பவத்தன்று கொலையில் முடிந்து, பின் இறுதியாக கணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையும் படிங்க: "தப்பு பண்ணிட்டோம் தூக்குல தொங்கிடலாம்".. கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை.. இறுதியில் பறிபோன உயிர்.!