மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பலாத்காரம்; நட்பாக பழகி கார் ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பலாத்காரம்; நட்பாக பழகி கார் ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!



Maharashtra Mentally Disabled Minor Girl Raped 

 

மராட்டிய மாநிலத்தில் உள்ள தாதர் பகுதியை சேர்ந்தவர் முகமது ஜலீல் (வயது 33). இவர் உபர் கார் ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவர் வசித்து வரும் பகுதியில், உறவினரின் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மகள் வசித்து வருகிறார். 

சிறுமியிடம் அன்பாக பழகி வந்த முகமது, அவரை சம்பவத்தன்று ஊரைச்சுற்றி காண்பிக்கிறேன் என தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். தனிமையான பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்றவர், அங்கு தனது வன்ம புத்தியை காண்பித்து இருக்கிறார். 

பின் சிறுமி வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில், ஜலீல் தன்னை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்ததை பெற்றோரிடம் கூறி இருக்கிற. இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமாகவே, அதிகாரிகள் முகமது ஜலீலை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.