விநாயகர் ஊர்வலம் கூட்டிட்டு போக சொன்னாரா? உயர்நீதிமன்ற நீதிபதியின் துடுக்கான பேச்சு.! 

விநாயகர் ஊர்வலம் கூட்டிட்டு போக சொன்னாரா? உயர்நீதிமன்ற நீதிபதியின் துடுக்கான பேச்சு.! 


MADRAS HIGHCOURT JUDGE ABOUT VINAYAGAR OORVALAM

விநாயகர் சதுர்த்தி வருவதை முன்னிட்டு அந்த ஊர்வலத்திற்கான அனுமதி வழங்க கோரி உள்ளூர் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்கள் பல்வேறு ஊர்களில் நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

VENGATESH

அப்போது எதன் அடிப்படையில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்படுகிறது என்று நீதிமன்ற சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தமிழக அரசு விநாயகர் சிலை வைத்து வழிபட அரசாணை வெளியிட்டு இருக்கிறது. அனைத்து அமைப்புகளுக்கும் சிலை வைத்து வழிபட அனுமதி இருக்கிறது. சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சிலை வைக்க அனுமதி கோரும் மனுக்கள் மீதான தீவிர விசாரணைக்கு பின்னர் உள்ளூர் போலீசார் அதற்கு அனுமதி வழங்குகின்றனர்." என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தமிழக அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைக்க அனுமதி கேட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், அவை ஏற்கப்பட மாட்டாது." என்று கூறி தீர்ப்பளித்தார். மேலும், "விநாயகர் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கூறினாரா? 

VENGATESH

அப்படி அவர் கூறாத பட்சத்தில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பலன்? விநாயகர் சிலைகளை வைத்து அரசியல் செய்யப்படுகிறது." என்று மிகவும் கோபமாக தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இவை அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்து." என்று தெரிவித்துள்ளார்.