ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
கள்ளக்காதல் மோகத்தில் கணவனை உயிருடன் புதைத்த மனைவி.!! ஆயுள் தண்டனை தீர்ப்பு விதித்து நீதின்றம் அதிரடி.!!
தர்மபுரி மாவட்டத்தில் கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை உயிருடன் புதைத்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு விதித்து தர்மபுரி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
தர்மபுரியை சேர்ந்தவர் ரூபன் கவியரசு (42). அந்த பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணமாகி பின்னர் மனகசப்பு ஏற்பட்டு அவரைப் பிரிந்துள்ளார். இதற்கடுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நிர்மலா ( 30) என்ற பொறியாளரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் நிர்மலா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே தர்மபுரி மாவட்டம் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த பொறியாளரான அபினேஷ் (35) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிர்மலா திருமணத்திற்கு பிறகும் அபினேஷ் உடனான காதலை தொடர்ந்துள்ளார். தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரமறிந்த கணவன், நிர்மலாவிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நிர்மலா தனது கள்ளக்காதலனான அபினேஷிடம் இது குறித்து கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்வதென இருவரும் சேர்ந்து திட்டமிடுள்ளனர்.
இதையும் படிங்க: "விடாமல் துரத்திய கள்ளக்காதல்..." கழுத்தை நெரித்து கணவன் கொலை.!! மனைவி, காதலன் வெறி செயல்.!!
அதன்படி கடந்த 2017 நவம்பர் மாதம் 17ம் தேதியன்று ரூபன் கவியரசு தனது நிதி நிறுவனத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது கூலிப்படை மூலம் அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு கடத்திச் சென்று அவருடைய கை, கால்களை கட்டிப் போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவரை குண்டல்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி அருகே குழி தோண்டி உயிருடன் புதைத்து கொலை செய்தனர். ரூபன் கவியரசு மாயமானது தொடர்பாக அவரது உறவினர்கள், நிர்மலாவிடம் கேட்டுள்ளனர். ஆனால் நிர்மலா பதில் கூறாமல் சமாளித்துள்ளார் . இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் தர்மபுரி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் நிர்மலாவிடம் விசாரணை நடத்திய போது தனது கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை புதைத்துக் கொலை செய்ததாக வாக்குமூலமளித்தார். இதனையடுத்து நிர்மலா மற்றும் அபினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நிர்மலா மற்றும் அபினேஷ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 11, 000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேகத்திற்குட்பட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி பலாத்காரம்... சித்தப்பாவுக்கு 35 வருட சிறை தண்டனை.!!