தமிழகம்

நள்ளிரவில் டாஸ்மாக் கடையை உடைத்து உயர்தர மதுபான பெட்டிகள் திருட்டு! புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பரபரப்பு!

Summary:

liquor box theft in tasmac

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையை நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். 

இதனையடுத்து மறுநாள் காலை அந்த டாஸ்மாக் கடையை திறக்க கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் கடைக்கு வந்துள்ளனர். அப்போது அந்த கடையின் ஷட்டரில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்குடி மற்றும் வடகாடு போலீசார், டாஸ்மாக் கடையை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து மதுபான பாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது. அந்த கடைக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.

கடையை உடைத்து மதுவை  திருடியவர்கள், கடையில் வைக்கப்பட்டிருந்த உயர்தரமான மதுபான பாட்டில்கள் கொண்ட 14 பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.88 ஆயிரத்து 800 என்றும் கூறப்படுகிறது. அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement