முடங்குகிறது கோயம்பேடு மார்க்கெட்! எத்தனை நாட்களுக்கு தெரியுமா? மக்களே உஷார்!

முடங்குகிறது கோயம்பேடு மார்க்கெட்! எத்தனை நாட்களுக்கு தெரியுமா? மக்களே உஷார்!



Leave for koyambedu market


கொரோனா தொற்று அச்சத்தால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28-ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பர‌வுவதை தடுக்கும் வகையில், கோயம்பேடு சந்தையில் மொத்தமாக காய்கறி வாங்க மட்டுமே அனுமதி, சில்லறை வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர ஆணையர் நேற்று அறிவித்து இருந்தார். 

Corna

இந்தநிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர ஆணையர் நேற்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால், பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.