தமிழகம்

ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனுடன் உல்லாசத்தில் இருந்த வி.ஏ.ஓ வித்யா..! கதவை பூட்டிய கணவன்..! சுற்றிவளைத்த ஊர்மக்கள்.!

ஊராட்சிமன்ற தலைவருடன் பெண் வி.ஏ.ஓ தனிமையில் இருந்தபோது அவரது கணவர் மற்றும் ஊர்மக்கள் அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சொக்கநாதன்புத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் வித்யா. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர் கண்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சம்பத்தவதன்று கண்ணன் வீட்டிற்கு சென்ற வித்யா கண்ணனுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட வித்யாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணன் வீட்டிற்கு சென்று வீட்டை பூட்டி இருவரையும் வீட்டிற்குள் சிறைவைத்துள்ளனர். பின்னர் ஊர்மக்களும் அங்கு திரண்டுள்ளனர்.

இதனை அடுத்து விஷயம் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து அங்கிருந்த வித்யாவின் கணவர், உறவினர்கள் மற்றும் கிராமத்தினரிடம் பேசி இருவரையும் வீட்டிற்குள் இருந்து மீட்டனர். மேலும், இருவரும் மீதும் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement