அரசியல் தமிழகம்

உங்களை விட சிறந்தவர் யாரும் இல்லை.! எப்போதும் உங்களுடன் இருப்பேன்.! குஷ்பு வாழ்த்து.!

Summary:

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மத்திய இணை அ

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மத்திய இணை அமைச்சர் பொறுப்பை நேற்று எல்.முருகன் ஏற்றுக் கொண்டார். தமிழக பா.ஜ. தலைவராக இருந்த எல்.முருகன் நேற்று முன்தினம் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவர் வகித்த தலைவர் பதவிக்கு மாநில துணை தலைவர்களாக உள்ள நயினார் நாகேந்திரன் அண்ணாமலை ஆகியோரில் ஒருவரை நியமிப்பது குறித்து தேசிய தலைமை பரிசீலித்தது.

இந்நிலையில் அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்து விட்டு 2020ல் பா.ஜ.வில் சேர்ந்தார். தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்தநிலையில் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை அடுத்து, தமிழக பாஜகவின் முன்னின்று வழி நடத்திச் செல்ல அண்ணாமலையை விட சிறந்தவர் யாருமில்லை. தமிழ்நாட்டில் உங்கள் வழிகாட்டுதலின் கீழ் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்கும் பணியில் முன்னோக்கி கொண்டு செல்ல தான் ஆவலாக இருப்பதாக கூறி குஷ்பு பாராட்டியுள்ளார்.
 


Advertisement