BREAKING: ஷாக் நியூஷ்! தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு!!!
பல ஜல்லிக்கட்டுகளில் வெற்றிபெற்று ஊருக்கே பெருமை சேர்த்த கருப்பணசாமி கோவில் பட்டத்துக்காளை மரணம்.! சோகத்தில் மூழ்கிய கிராமம்.!
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரத்தில் உள்ள கருப்பணசாமி கோவிலுக்கு சொந்தமான பட்டத்துக்காளையை அப்பகுதியினர் வளர்த்து வந்தனர். கருப்பணசாமி கோவில் காளையானது புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, சிராவயல் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று சிறந்த காளையாக திகழ்ந்தது.
கருப்பணசாமி கோவில் பட்டத்துக்காளையின் வெற்றியால் அப்பகுதிக்கே பெருமை என மக்கள் கருதிவந்தனர். இந்தநிலையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பட்டத்துக்காளை நேற்று உயிரிழந்தது. இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கி மக்கள் கண்ணீர் வடித்தனர்.
இதனையடுத்து உயிரிழந்த கருப்பணசாமி கோவில் பட்டத்துக்காளைக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தினர். மேலும், கிராம பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர். இதனையடுத்து கோவில்காளையை வண்ண மலர்களால் அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து சென்று கருப்பணசாமி கோவில் வளாகத்தில் அடக்கம் செய்தனர்.