சிலிண்டர் விலை இன்று... மாதத்தின் முதல் தேதியில் வந்தது முக்கிய செய்தி. இறங்கிய இடி..!



LPG Price Today May 2026 No Change in Domestic Cylinder Price in Chennai, Commercial Rates Surge

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.

மத்திய கிழக்கு போர்:

Cylinder Price May 2026 Today: ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாகவே இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வந்த போர், இஸ்ரேல்-அமெரிக்கா Vs ஈரான் என விரிவடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த பாலஸ்தீனிய போர், ஈரான் மீதான தாக்குதலுக்கு முன்பு வரை ஆரம்பகட்ட நிலையில் இருந்தாலும், பிப்ரவரி 28ஆம் தேதி இஸ்ரேலின் மீது ஈரான் தாக்குதலை முன்னெடுத்தது. 

இதையும் படிங்க: #Breaking: மாதத்தின் முதல் நாள்.. பெட்ரோல், டீசல் விலை., சிலிண்டர் விலை நிலவரம் என்ன? விபரம் இதோ.!

cylinder rate change

ஹோர்முஸ் ஜலசந்தி:

Gas Cylinder Price Chennai: இதனால் போர் தீவிரமடைந்தது ஹோர்முஸ் ஜலசந்தி எனப்படும் ஈரான்-அமீரகம் கடல்வழிப் பாதை தடைபட்ட நிலையில், எண்ணெய் கப்பல்கள் பலவும் வெளியே வர இயலாமல் சிக்கிக் கொண்டுள்ளன. எண்ணெய் கப்பல்கள் எரிவாயுவை நிரப்ப செல்ல முடியாமலும் கடலில் நிற்பதால் உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு உலகளாவிய அளவில் அனுப்பி வைக்கப்பட்டாலும், அமீரகம், ஈரான் பகுதிகளில் கிடைக்கும் எண்ணெய் இந்தியா போன்ற நெருங்கிய நாடுகளுக்கு எளிதாக கிடைக்கும் என்பதால், அங்கிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்பட்டது. 

cylinder rate change

வணிக சிலிண்டர் உயர்வு, வீட்டு சிலிண்டர் மாற்றமில்லை:

இந்த நிலையில், தற்போதைய சூழல் காரணமாக எரிவாயு விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், மாதத்தின் முதல் தேதியான இன்று சமையல் எரிவாயு விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டெல்லியில் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை ரூ.993 உயர்ந்து, ரூ.3071.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் பரிதவிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். வணிக சிலிண்டரின் விலை கிடுகிடு உயர்வால், சமையல் பொருட்கள் மீதான விலையும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஹோட்டல்களில் ஏற்கனவே கேஸ் பில் என தனியாக பட்டை தீட்டும் நிலையில், தற்போது தொகை மீண்டும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 14 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமில்லை. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.100.84 க்கும், டீசல் ரூ.92.84 க்கும், எல்.பி.ஜி. எரிவாயு கிலோ ரூ.91.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.968 உயர்ந்து ரூ.3237 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 

இதையும் படிங்க: மக்களுக்கு ஷாக்.. நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்வு.. உணவுகளின் விலையும் உயரும் அபாயம்.!