தமிழகம்

இன்ஸ்டா காதலனை சந்திக்க சென்ற சிறுமியை வீட்டில் அடைத்து சீரழித்த பூசாரி..!

Summary:

இன்ஸ்டா காதலனை சந்திக்க சென்ற சிறுமியை வீட்டில் அடைத்து சீரழித்த பூசாரி..!

16 வயது சிறுமி காதலில் விழ, அவரை அடைய நினைத்த காம பூசாரி நயவஞ்சகத்துடன் செய்த பகீர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனை சந்திக்கலாம் என்று வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வீட்டில் இருந்த சிறுமி மாயமாகியுள்ளார். இந்த விஷயம் குறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளிக்கவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிறுமி வைத்திருந்த செல்போனின் ஐஎம்ஐ நம்பரை வைத்து சோதனை செய்கையில், அவர் மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு பேசியிருந்தது தெரியவந்தது. மேலும், கொடைக்கானல் அருகேயுள்ள நாயுடுபுரம் பகுதியை சார்ந்த பூசாரி ராம்சுந்தர் என்பவரின் செல்போன் எண்ணுக்கும் தொடர்பு கொண்டு பேசியது அம்பலமானது. 

இதனையடுத்து, பூசாரி ராமசுந்தரை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், "சிறுமியின் பெற்றோர் நடத்தி வந்த கடையில் சிறுமியும் உதவியாக இருந்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் சிறுமி வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வழியில் படித்து வரும் சூழலில், சிறுமிக்கு பெற்றோர் தனியாக செல்போன் வாங்கியும் கொடுத்துள்ளனர். அப்போது, இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய சிறுமிக்கு ஆண்களின் நட்பு கிடைத்து, அவர்களுடன் சேட்டிங் செய்ய தொடங்கியுள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த சரண்ராஜ் (வயது 21) என்ற இளைஞரையும் சிறுமி காதலித்ததாக தெரியவரும் நிலையில், காதலனை பார்க்க பையில் தனது ஆடைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். சிறுமியை கவனித்த பூசாரி ராமசுந்தர் விசாரிக்கையில், அவர் வெளியூர் செல்வதாக தெரிவித்துள்ளார். அவ்வப்போது கோவிலுக்கு சென்று வந்த வகையில், சிறுமியிடம் நயவஞ்சக பூசாரி நட்பாக பழகுவது போல நடித்திருந்த நிலையில், சிறுமியும் அவரை நம்பி தகவலை தெரிவித்துள்ளார்.

சுதாரித்துக்கொண்ட ராம்சங்கர், இதுதான் சிறுமியை சீரழிக்க தருணம் என்று நினைத்து, திருப்பத்தூர்க்கு இங்கிருந்து பேருந்து இல்லை என கூறி ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்று, ஒருவாரம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்" என்பது தெரியவந்துள்ளது. ராமசுந்தரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 


Advertisement