கள்ளக்காதலுக்கு மகன் இடையூறு.. 3 வயது பச்சிளம் பிஞ்சின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தாய்.!

கள்ளக்காதலுக்கு மகன் இடையூறு.. 3 வயது பச்சிளம் பிஞ்சின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தாய்.!


Kerala Palakkad MOther Kills 3 Aged Child BOy due to her Interrupt Affair Life

உல்லாசத்தை தரும் கள்ளக்காதல் வாழ்க்கைக்கு மகன் இடையூறாக இருப்பதாக எண்ணிய தாய், 3 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, எலப்புள்ளி நென்மேனி கிராமத்தை சேர்ந்தவர் ஷமீர். இவரின் மனைவி ஆசி (வயது 22). தம்பதிகளுக்கு முகமது ஷானு என்ற 3 வயது மகன் இருக்கிறார். இந்நிலையில், கணவன் - மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே வசித்து வருகிறார்கள். 

நேற்று மாலை நேரத்தில் சிறுவன் முகமது ஷானு படுக்கையறையில் பிணமாக இருந்துள்ளான். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மகன் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் வடித்து இருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

KERALA

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்புகையில், சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. ஆசியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தான் பெற்றெடுத்த மகனை ஈவு இரக்கமின்றி கொன்றதும் தெரியவந்தது.

விசாரணையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஆசிக்கு, அப்பகுதியை சேர்ந்த வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்படவே, இந்த உல்லாச வாழ்க்கைக்கு சிறுவன் இடையூறாக இருப்பதாக எண்ணி மகனை கொலை செய்து நாடகமாடி இருக்கிறார். இதனையடுத்து, ஆசியை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.