காதலியின் மீது சந்தேகம்.. பருவக்காதலால் நடந்த கொலை., தற்கொலை.. காட்டுப்பகுதியில் இளம் காதல் ஜோடி மர்மச்சாவு..!Kerala Love Couple Died Suicide

காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த கயவன், காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் உண்ணி (வயது 20). அங்குள்ள கல்லறை என்ற கிராமத்தைச் சார்ந்தவர் சுபி (வயது 18 ) இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், சுமிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக உன்னி சந்தேகப்பட்ட நிலையில், காதலர்கள் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும், எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. 

பிள்ளைகளை காணாது பெற்றோர் பரிதவித்து இருவரையும் தேடி வந்த நிலையில், அங்குள்ள காட்டு பகுதியில் சுபி அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்துள்ளார். அருகே காதலன் தூக்கில் தொங்கியுள்ளார். இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விசாரணை நடந்து வருகிறது.