கேரளாவிற்கு நிவாரண உதவியை அள்ளி.. அள்ளிக்கொடுக்கும் தமிழக மக்கள்! தமிழில் நன்றி கூறிய கேரள முதல்வர்!

கேரளாவிற்கு நிவாரண உதவியை அள்ளி.. அள்ளிக்கொடுக்கும் தமிழக மக்கள்! தமிழில் நன்றி கூறிய கேரள முதல்வர்!



kerala cm tamil twit


கேரளாவில் பெய்த பேய் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 59 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அந்த 59 பேரையும் தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கேரளாவின், 14 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கண்ணுார், காசர்கோடு, இடுக்கி, மலப்புரம், வயநாடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து மழையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவுக்கு பல தரப்பினரும் பொருளாகவும், பணமாகவும் தந்து உதவி வருகின்றனர். 

தமிழகத்திலிருந்து பொதுமக்களால் கேரளாவிற்கு ஏராளனமான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இருதினங்களுக்கு முன்னர் தி.மு.க சார்பில் முதற்கட்டமாக 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதனையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தமிழில் டுவிட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். என பதிவிட்டிருந்தார்.