தமிழகம்

நேற்றுதான் சசிகலா நேரில் சென்று சந்தித்து வந்தார்.! அ.தி.மு.க.முன்னாள் அவைத்தலைவர் கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்.!

Summary:


கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் அவருக்கு வயது 85. 


கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் அவருக்கு வயது 85. 

புலமைப்பித்தன் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக  1964ஆம் ஆண்டு  சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரான இவர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். புலமைப்பித்தன் எம். ஜி. ஆரால் அரசவைக் கவிஞராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் புலவர் புலமைப்பித்தன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை புலமைபித்தன் காலமானார். நீலாங்கரையில் உள்ள புலமைப்பித்தன் வீட்டில்  இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த  புலமைபித்தனை, சசிகலா நேற்று நேரில் சென்றுசந்தித்து உடல்நலம் விசாரித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் இருந்துவந்த கவிஞர் புலமைப்பித்தன் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement