கணவன்மார்களை கழட்டிவிட்டு கட்டுக்கட்டாக கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை : திமுக அமைச்சர் பெயரை பயன்படுத்தி பகீர் சம்பவம்.!

கணவன்மார்களை கழட்டிவிட்டு கட்டுக்கட்டாக கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை : திமுக அமைச்சர் பெயரை பயன்படுத்தி பகீர் சம்பவம்.!



Karur Girl Cheated 5 More Person

ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபாடு கொண்ட பெண்மணி 5 இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய நிலையில், இறுதியாக திமுக அமைச்சரின் நெருங்கிய உறவினர் என்று கூறி பணத்தை கோடிக்கணக்கில் ஏமாற்றி சிக்கிக்கொண்டார்.

கரூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சௌமியா என்ற சபரி (வயது 28). இவர் பி.காம் பட்டதாரி ஆவார். சௌமியாவின் பெற்றோர் கரூரில் டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவரின் சகோதரிக்கு திருமணம் முடிந்து கணவருடன் இருக்கிறார். ஆடம்பர வாழ்க்கையின் மீது நாட்டம் கொண்ட சௌமியா, பிறரை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டு பிழைக்க தொடங்கியுள்ளார். 

மக்ளின் நடவடிக்கையை கண்ட பெற்றோரும் கண்டித்தாலும் எவ்வித பலனும் இல்லை. இதனால் பெற்றோரை பிரிந்த சௌமியா, இராமநாதபுரத்தில் இருக்கும் விடுதியில் தங்கியிருந்துள்ளார். அப்போது, ராஜேஷ் என்ற காவலருடன் பழக்கம் ஏற்படவே, இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார். கணவர் மூலமாக தனக்கு காவல்துறையின் மேலிடத்தில் செல்வாக்கு உள்ளதாக மோசடி செயலில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

இவ்வாறாக ரூ.1 கோடி வரை பலரிடமும் மோசடி செய்த நிலையில், காவல் அதிகாரியான கணவரின் பணத்தை கையாடல் செய்து தப்பித்துள்ளார். இந்த பணத்தை வைத்து ரூ.7 இலட்சத்திற்கு கரூர் மணவாட்டி பகுதியில் நிலத்தையும் விலைக்கு வாங்கியுள்ளார். சௌமியாவின் மோசடி செயல் குறித்து பெறப்பட்ட புகாரில் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். 

Karur

ஜாமினில் வெளியே வந்த சௌமியா காவலரான கணவரை பிரிந்து, சதீஷ் என்ற வாலிபரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அவரையும் சில மாதங்களில் பிரிந்து கரூருக்கு வந்த சௌமியா, தன்னை வங்கி உதவி மேலாளர் என அறிமுகம் செய்துகொண்டு, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் என்றும் கூறிவந்துள்ளார்.

இதனை நம்பிய பலரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக நபருக்கு தலா ரூ.20 இலட்சம் வரை பெற்றுள்ளார். மேலும், பணத்தை திரும்பி கேட்போரை மிரட்டியும் வந்துள்ளார். இந்த நிலையில், அங்குள்ள வெங்கமேடு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை திருமணம் செய்ய சௌமியா தயாராகவே, இதனை அறிந்த மக்கள் சௌமியாவை கையும் களவுமாக பிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து நடைபெற்ற விசாரணையில் சௌமியா வங்கி மேலாளரும் இல்லை, திமுக காமிச்சார் செந்தில் பாலாஜியின் உறவினரும் இல்லை என்பது அம்பலமானது. இவர் தற்போது வரை 5 பேரை திருமணம் செய்துள்ளது உறுதியான நிலையில், மேற்படி விபரங்கள் சேகரிப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.