கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் டான்ஸ் ஆடும் போதே சரிந்து விழுந்த நபர்... அடுத்த நொடி வந்த திடீர் மரணம்! பகீர் வீடியோ..!!!



karur-dancer-jeeva-dies-of-heart-attack-on-stage

கரூர் மாவட்டம் மணவாசி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஜீவா, கோயில் கும்பாபிஷேக விழாவில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேடையிலேயே சரிந்து விழுந்த கலைஞர்

கரூர் தொழிற்பேட்டை பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் ஜீவா தனது குழுவினருடன் உற்சாகமாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் திடீரென மயங்கி மேடையிலேயே சரிந்து விழுந்தார்.

மருத்துவமனைக்கு அழைத்தும் பலனில்லை

இதனால் அதிர்ச்சியடைந்த சக நடனக் கலைஞர்களும், விழாவிற்கு வந்திருந்த பொதுமக்களும் உடனடியாக மேடைக்கு விரைந்து சென்று ஜீவாவை மீட்டனர். அதன்பின் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நொடியில் இப்படியா நடக்கனும்! மகிழ்ச்சியாக நடனமாடிய பெண்! அடுத்த நொடி திடீரென மயங்கி விழுந்து....... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

அதிர்ச்சியில் பக்தர்கள்; அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்

திருவிழா மகிழ்ச்சிக்கிடையே நடந்த இந்த உயிரிழப்பு அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீப காலமாக குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இளம் வயதிலேயே திடீர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவது சமூகத்தில் கவலையை ஏற்படுத்தி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நம்பவே முடியல... மேடையில் பேசிக்கொண்டிருந்த 24 வயது இளம் பெண்! திடீரென சரிந்து விழுந்து மயங்கி.... அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி..!!