"தூங்கி எழுந்ததும் நாங்கல்லாம் கொலை செய்வோம்" வீராவேசம் பேசிய கருணாஸ்!! இன்று அதிகாலை தூங்கி எழுந்ததும் கைது!!karunas-arrested-early-morning

திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ-வாக உள்ள நடிகர் கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார்.

அப்போது பேசிய அவர் "இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிங்க கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு சினிமாவுல வர மாதிரி நடந்துக்குறாங்க. அவங்களுக்கு மேல் அதிகாரிங்க அறிவுரை பண்னனும். என் ஜாதிகாரன் மேல கைய வச்சா கைய கால உடைச்சிருவேன். உங்களுக்கு எல்லாம் போதை ஏத்தினா தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கொலை செய்துவிடுவோம் என சர்ச்சைக்கு உள்ளாகும் அளவிற்கு வீராவேசமாக பேசினார்.

karunas arrested

காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். சாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசினார். மேலும், முதல்வர் நான் அடிப்பேன் என பயப்படுவதாகவும் பேசினார்.

இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கருணாசை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தனர்.

கைதாகி செல்லும்போது பேசிய கருணாஸ், ‘ சட்டமன்ற உறுப்பினரான என்னை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி வேண்டும். ஆனால், என்னை கைது செய்ய சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி பெற்றதா என தெரியவில்லை.

karunas arrested

இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கும் வகையில் பேசிய என் மீது குற்றப்பிரிவு 307 கீழ் ஏன் வழக்கு பதிவு செய்தனர் ? என தெரியவில்லை. கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நோக்கில் ஆளும் அதிமுக அரசு செயல்படுகிறது. 

இந்த வழக்கை சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் சந்திப்பேன்’ என அவர் தெரிவித்தார். இதன் பின்னர் விசாரணைக்காக கருணாசை போலீசார் அழைத்து சென்றனர்.