சிபிஐயின் கைது வேட்டையில் சிக்கிய கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர்.! கைது வேட்டை தொடருமா.?

சிபிஐயின் கைது வேட்டையில் சிக்கிய கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர்.! கைது வேட்டை தொடருமா.?



karthik chidambaram auditor arrested

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை சிபிஐ கைது செய்தது.

கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஸ்கர ராமனின் வீடு அலுவலகங்களில் நேற்று நடத்திய சோதனையை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பஞ்சாப் மாநிலம், மான்ஸா பகுதியில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வந்த மின் திட்டப் பணிகளில் வேலை செய்ய 263 சீனர்களுக்கு முறைகேடாக ஒரே மாதத்தில் விசா வழங்க ரூ. 50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேர் மீது சிபிஐ காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான  9க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தநிலையில், சீனர்களுக்கு விசா வாங்கி தந்தற்கு ரூ 50 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.