தமிழகம்

மணமேடையில் மயங்கி மூளைச்சாவடைந்த பெண்.. மறுவாழ்வளிக்க உடலுறுப்பு தானம்.! பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்.!!

Summary:

மணமேடையில் மயங்கி மூளைச்சாவடைந்த பெண்.. மறுவாழ்வளிக்க உடலுறுப்பு தானம்.! பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்.!!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் தானம் செய்யப்பட்டது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம், ஸ்ரீனிவாசப்பூர் பகுதியில் வசித்து வந்த பெண்மணி சைத்ரா (வயது 25). இவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் சைத்ராவும், மணமகனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது, சைத்ரா திடீரென மயங்கி விழுந்துவிடவே, பேச்சுமூச்சின்றி இருந்த அவரை மீட்டு உறவினர்கள் உடண்டிஐக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சைத்ரா மூளைச்சாவு அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சைத்ராவின் பெற்றோர் மற்றும் மணமகன் குடும்பத்தினர் கதறியழுதனர். 

பின்னர், அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த பெற்றோர், தங்களின் விருப்பத்தை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். அவரின் உடல் உறுப்புக்கள் அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. அது தேவையானவர்களுக்கு வழங்கப்படும். 

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மேடையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளது பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது. 


Advertisement