இந்தியா

கர்நாடகாவில் மது விற்பனை ஆன, முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா?

Summary:

Karnataka first day liquor sale

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 42 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.    

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் நாடுமுழுவதும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், நேற்று முதல் 3-ம் கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்க படுவதால், மால்கள் இல்லாமல் தனி கட்டடத்தில் இயங்கு மது கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று காலை 9 மணி முதல் மது விற்பனை தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்குப் பிறகு கர்நாடகாவில் மது கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 42 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.


Advertisement