அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
குளிர்பானத்தில் ஆசிட் கலந்து சிறுவனுக்கு குடிக்க கொடுத்த பயங்கரம்.. கிட்னி செயலிழந்து ஊசலாடி உயிரிழந்த மாணவன்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை, நுள்ளிக்காடு பகுதியில் வசித்து வருபவர் சுனில். இவரின் மகன் அஸ்வின் (வயது 11). இவர் அதங்கோடு பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு வந்த அஸ்வினுக்கு, அதே பள்ளியில் பயின்று வந்த மாணவன் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளான். அதில் ஆசிட் கலக்கபட்டது தெரியாமல் குளிர்பானம் குடித்த சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த சிறுவன் ஆசிட் குடித்துள்ளதாக மருத்துவர்கள் கூற, விசாரணையின் போது மற்றொரு மாணவன் கொடுத்த குளிர்பான விஷயம் அம்பலமானது. இதனையடுத்து, சிறுவன் கேரளாவில் உள்ள நொய்யாற்றிங்கரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் 2 கிட்னியும் செயலிழந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.