அதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு.. பரபரப்பு தகவல், பகீர் பின்னணி.. அதிரவைக்கும் வாக்குமூலம்.!

அதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு.. பரபரப்பு தகவல், பகீர் பின்னணி.. அதிரவைக்கும் வாக்குமூலம்.!



Kanyakumari Nagarcoil AIADMK Worker Son Killed by 2 Man Gang

இருவரிடையே ஏற்படும் பிரச்சனையை பேசித்தீர்க்க சென்ற இடத்தில், அதிமுக பிரமுகர் மகனை தீர்த்துக்கட்டிய கும்பல் உடலை 15 கி.மீ தூரம் தூக்கி சென்று புதைத்து 4 நாட்களாக ஊர் ஊராக சுற்றிய சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், சியோன் தெருவில் வசித்து வருபவர் செல்லப்பன் (வயது 66). இவர், கன்னியாகுமரி மாவட்ட மேற்கு அதிமுக., எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவும், அயக்கோடு பஞ்சாயத்து தலைவராகவும் இருக்கிறார். இவரின் மகன் லிபின் ராஜா (வயது 23). இவர் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். 

இந்நிலையில், ஊருக்கு வந்திருந்த ராஜா, கடந்த 4 ஆம் தேதி வெளியே சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இந்த விஷயம் தொடர்பாக செல்லப்பன் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், லிபின் ராஜாவின் உடல் பழவூர் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, அதிகாரிகள் லிபின் ராஜாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பிரேத பரிசோதனைக்கு பின்னர் லிபின் ராஜாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் வசித்து வரும் எபின் (27), ஸ்டீபன்ராஜ் (வயது 26) ஆகியோர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

kanyakumari

இதுதொடர்பான வாக்குமூலத்தில், "லிபின் ராஜாவுக்கும் - எபினுக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இந்த பிரச்சனையை சம்பவத்தன்று பேசி தீர்க்கலாம் என்று எபினை லிபின் அழைத்துள்ளார். இதனையடுத்து, எபின், ஸ்டீபன் ராஜ் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தைக்கு செல்ல, மூவரும் வழுக்கம்பாறையில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, இருதரப்பு தகராறு உருவாக, ஆத்திரமடைந்த எபின் மற்றும் ஸ்டீபன் லிபின் ராஜை கட்டையால் தாக்கியுள்ளனர். 

இதனால் மயங்கி விழுந்த லிபின் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, பதறிப்போன இருவரும் லிபின் ராஜாவை தங்களின் இருசக்கர வாகனத்தில் நடுவே உட்காரவைத்து பல இடங்களில் சுற்றித்திரிந்து, 15 கி.மீ தொலைவில் உள்ள பழவூர் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சானல் கரையோரம் குழிதோண்டி புதைத்துள்ளனர். காவல் துஆயினர் விசாரணையை தொடங்கியதும் ஊர் ஊராக சுற்றியவர்கள் 4 நாட்களாக சென்னை, மதுரை, திருச்சி நகரங்களுக்கு சென்றுள்ளனர். இறுதியில், காவல் துறையினர் நெருங்கியதை அறிந்து நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.