தமிழகம்

பார்க்கும்போதே மனசு பதறுது!! இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கண் மருத்துவர் சம்பவ இடத்திலையே பலி.. வைரல் சிசிடிவி காட்சிகள்..

Summary:

பைக் விபத்தில் 24 வயது இளம் கண் மருத்துவர் சம்பவ இடத்திலையே பலியான சிசிடிவி காட்சிகள் இணைய

பைக் விபத்தில் 24 வயது இளம் கண் மருத்துவர் சம்பவ இடத்திலையே பலியான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் 24 வயதாகும் இளம் கண் மருத்துவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றிவந்துள்ளார். நேற்று தனது பணி முடிந்து தனது இருசக்கர வாகனம் மூலம் ஜாபர் வீடு திருப்பியுள்ளார்.

திருத்துவபுரம் என்ற பகுதியில் அவர் வந்துகொண்டிருந்தபோது ஒரு வளைவை கடக்க முயன்றபோது அவரது இருசக்கர வாகனம் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சாய்ந்து, பக்கவாட்டில் இருந்த தடுப்பு சுவரில் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜாபர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜாபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் விபத்து நடந்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையியல் தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.


Advertisement