உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தைக்கு சரக்கு ஊற்றிவிட்டு கொலை: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் தாயின் செயல்.!

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தைக்கு சரக்கு ஊற்றிவிட்டு கொலை: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் தாயின் செயல்.!


Kanyakumari Affair Couple Killed Baby 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இறையுமன்துறை பகுதியில் வசித்து வருபவர் சீனு (வயது 28). மனைவி ப்ரபுஷா (வயது 23). தம்பதிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவருக்கும் நட்சன் ராய் என்ற 3 வயது மகனும், அரிஸ்டோ என்ற ஒரு வயதுடைய மகனும் இருக்கின்றனர். 

தம்பதிகளின் வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த வேலையில், பிரபுசாவுக்கு முகமது சதாம் உசேன் (வயது 32) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால், கணவன் - மனைவி பிரிந்து இருக்கின்றனர். மூத்த குழந்தை சீனுவிடமும், இளைய குழந்தை ப்ரபுஷாவிடமும் வளர்ந்துள்ளது. பிரபுசாவும் - முகமதுவும் தூத்துக்குடியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், குழந்தை அரிஸ்டோவுக்கு உடல்நிலை சரியில்லை என கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, அங்கு குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் உடலில் காயம் இருந்த காரணத்தால், மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு ப்ரபுஷா - முகமது உசேன் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குழந்தையை கள்ளக்காதல் ஜோடி மதுபானம் கொடுத்து உருட்டுக்கட்டை வைத்து தாக்கி கொலை செய்தது அம்பலமானது. 

விசாரணைக்கு பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.