தமிழகம்

பார்க்கவே மனசு பதறுது!! பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட நபர்!! வைரல் சிசிடிவி வீடியோ..

Summary:

பார்க்கவே மனசு பதறுது!! பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட நபர்!! வைரல் சிசிடிவி வீடியோ..

பேருந்து சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் சம்பவத்தன்று தனது  இருசக்கர வாகனத்தில் வில்லுக்குறி பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்து, சாலையை கடப்பதற்காக திடீரென வலது பக்கமாக திரும்பியுள்ளார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அரசு பேருந்து சிவகுமார் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச்சென்றது. இந்த விபத்தில் சிவகுமார் தலையில் அணிந்திருந்த தலைக்கவசம் கழண்டு சாலையில் தெறித்து ஓடியது. இருப்பினும் பெரிய காயம் ஏதும் இன்றி சிவகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தநிலையில், தற்போது அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.


Advertisement