பைக் ஸ்டண்டில் மாஸ் காட்ட நினைத்து பீஸ் போன இளசுகள்; கொத்தாக தூக்கிய போலீஸ்.!!Kanyakumari 12 Youth Bike Seized by Cops 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள்நகர் பகுதியில் வசித்து வரும் 12 க்கும் மேற்பட்ட சிறார்கள் கும்பல், சாலைகளில் விதிகளை மீறி பயணம் செய்து இருந்தது. இந்த விஷயத்தை விடியோவாகவும் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்திருந்தது. 

இதுகுறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கண்டனத்தை குவித்தது. மேலும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விபரம் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் பார்வைக்கு சென்றுள்ளது. 

இதையும் படிங்க: முதல் மனைவியை மறந்து வேறொரு பெண்ணுடன் தார்மீக காதல்; திருமணம் முடிந்து அம்பலமான குட்டு.. வில்லங்கமான சம்பவத்தால் கம்பி எண்ணும் காவலர்.!

பெற்றோருக்கு அபராதம் & இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இதனால் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இச்செயலில் ஈடுபட்ட 12 சிறார்களின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவருக்குமே 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்பது உறுதியானது. 

இதனால் சிறுவர்களுக்கு இருசக்கர வாகனம் இயக்க அனுமதி வழங்கியதாகவும், அதனை வாங்கிக்கொடுத்ததாகவும் பெற்றோருக்கு ரூ.11 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை வாங்க, இன்ஸ்டா பிரபலம் போல செய்தது அவர்களுக்கு எதிராக அமைந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ஓட்டலில் வாங்கிய சிக்கன் கிரேவியை மறுநாள் சுடவைத்து சாப்பிட்ட இளைஞர் பலி.. மதுரையில் சோகம்.!