தமிழகம்

கோவில் கோவிலாக ஏறி தவமிருந்து பெற்ற குழந்தை..! விளையாடியபோது வாளி தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி.. கதறும் பெற்றோர்.!

Summary:

Kanishka

திருப்பூர் அனுப்பர்பாளையம் படேல் வீதியை சேர்ந்தவர் கண்ணன்-பாண்டியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். 

குழந்தைக்காக இவர்கள் கோவில் கோவிலாக ஏறி தவமாய் தவமிருந்து ஐந்து ஆண்டுகள் கழித்து அழகான ஒரு பெண் பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு கனிஷ்கா என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தாய் பாண்டியம்மாள் குழந்தை கனிஷ்காவை வாளி தண்ணீரில் விளையாட வைத்து விட்டு துணிகளை துவைப்பதற்காக துணிகளை எடுக்க வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை வாளியில் தலைக்கீழாக விழுந்துள்ளது.

வாளிக்குள் விழுந்த சிறிது நேரத்திலேயே குழந்தை மயங்கி கீழே விழுந்துள்ளது. உடனே பாண்டியம்மாள் குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 


Advertisement