நான் சொன்னது சரித்திர உண்மை! கமலின் பேச்சால் பரபரப்பு!

நான் சொன்னது சரித்திர உண்மை! கமலின் பேச்சால் பரபரப்பு!



kamal talka about his last speech


4 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தல் வருகிற 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இந்தநிலையில் அணைத்து கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

கடந்த 12-ந்தேதி அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவன் பெயர் கோட்சே எனத் கூறியுள்ளார்.அவரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவரது பிரசாரம் 2 நாட்கள் ரத்துசெய்யப்பட்டது.

kamalhasan
இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் அரசியல் பிரமுகர்கள், பாஜக,  அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கமல்ஹாசனுக்கு நாக்கில் சனி உள்ளது. ழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும், அவரின் கட்சியை தடை செய்ய வேண்டும் என பேசினார். 

இந்தநிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று மதுரை தோப்பூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், நான் அரவக்குறிச்சியில் பேசியது குறித்து கோபப்படுகிறார்கள். நான் சொன்னது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்க வில்லை. எனது பேச்சை முழுவதுமாக கேட்காமல் அதன் ஒரு பகுதியை கத்தரித்து ஊடகங்கள் வெளியிட்டன.  நான் ஒரு தடவைதான் சொன்னேன். ஊடகங்கள் பல முறை ஒளி பரப்பி விடுகின்றன என கூறினார்.