அரசியல் தமிழகம்

கஜா புயல் நிவாரண உதவி கேட்டு கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிய கமல்!

Summary:

Kamal sent an letter to kerala cm for gaja relief

கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது. புயல் பாதித்த ஒரு வாரத்திற்கு பிறகு கடந்த சில நாட்களாக தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைத்து வருகிறது. 

நிவாரண உதவிக்காக பலர் தமிழக அரசின் மூலமாகவும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், கேரள முதல்வருக்கு கஜா புயல் நிவாரண உதவி கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கமல் கூறியிருப்பதாவது,

“அண்மையில் வீசிய கஜா புயல், தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சி, கேரள அரசினையும் மக்களையும் தங்களால் இயன்ற உதவிகளை தமிழ்நாட்டிற்கு இப்போது அளித்திட முன் வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இப்பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வகள் மக்களிடம் அதிகமாக மேலோங்கிட வேண்டும்" என எழுதியுள்ளார். 

மேலும் கடிதத்தின் முழு பகுதியை கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 


Advertisement