இலங்கையில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது! ஆவேசத்தில் கமல் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

இலங்கையில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது! ஆவேசத்தில் கமல் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?



kamal hasan talk about mullivaikal

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைகவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு, தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.