அரசியல் தமிழகம்

வாருங்கள் பணியாற்றுவோம்.! ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் கமல்.!

Summary:

வாருங்கள் பணியாற்றுவோம் என நடிகர் ரஜினிக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. 

இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமையன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் திடீரென்று சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தலைவர் என அழைக்கப்படும் நபர் இன்னும் அரசியலை கவனித்து கொண்டுள்ளார். வாய்ப்பு இருக்கிறது என் பின்னால் வாருங்கள் என நான் சொல்லவில்லை. வாருங்கள் பணியாற்றுவோம் என்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement