தமிழகம்

மனநலம் பாதித்த பெண்ணுக்கு வழிகாட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய செஞ்சிலுவை சங்கம்!

Summary:

junior red cross

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நேற்று(மே-30), சுமார் 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண் ஒருவர், ஆபத்தான முறையில் பேருந்துகளின் இடையில் நடமாடிக் கொண்டிருந்தார். அதை கவனித்த ரமணி என்பவர், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக் கிளைக்கு தகவல் அளித்துள்ளார். 

இதன் அடிப்படையில் ராஜ்குமார் நேரில் சென்று அப்பெண்ணை மீட்டு, அவரைப் பற்றிய தகவல் சேகரித்து அவரின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டார். இத்தீவிர முயற்சியின் பலனால் அப்பெண் மதுரை பெத்தானியாபுரம் பள்ளிகூட தெருவைச் சேர்ந்த ஜெகதீசன் மனைவி என்பதும் இரு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து சமூகநல பெண்கள் நல அலுவலர் பிரேமாவின் உதவியோடு அப்பெண் அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார். இந்த சம்பவம் மதுரைவாசிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement