#வீடியோ: காளையை கட்டிய கயிறு இளைஞரின் கழுத்தில் சிக்கி பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி!



Jallikattu 2022 viral videos

ஜல்லிக்கட்டு காளையின் மீது கட்டியிருந்த கயிறு இளைஞரின் கழுத்தில் சிக்கி, பல அடி தூரம் இழுத்துச்செல்லப்படும் காட்சி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் சிறப்பாக தொடங்கி, பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, மூன்ச்சூர் பட்டு பகுதியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஜல்லிக்கட்டு காளையின் மீது கட்டியிருந்த கயிறு இளைஞரின் கழுத்தில் சிக்கியத்தில், அந்த இளைஞர் பல அடிதூரம் இழுத்துச்செல்லப்பட்டார்.

வடிவாசலில் இருந்து அவிழ்த்துவிட காளை ஒன்று சீறிப்பாய்ந்து வெளியே வந்த நிலையில், அந்த மீது கட்டப்பட்டிருந்த கயிறு, அங்கு நின்றிந்த மாடுபிடி வீரர் ஒருவரின் கழுத்தில் சிக்கியது. மாடு வேகமாக ஓடியதை அடுத்து, அந்த இளைஞர் பல அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்டார்.

உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து மாட்டை நிறுத்தி, அந்த இளைஞரை மீட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.