"ஸ்டாலின் ஆட்சி கலைக்கப்படும்... நல்ல செய்தி சொல்லுவார்..." அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியால் சர்ச்சை.!is-dmk-govt-going-to-dismiss-ex-admk-minister-jeyakumar

திமுக அரசு கலைக்கப்படும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

செந்தில் பாலாஜி கைது மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள்  அமலாக்கத்துறை சோதனை என தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாகவே அனல் பறந்து வருகிறது. இந்நிலையில் ஊழலுக்காக டிஸ்மி செய்யப்பட்ட அரசு கலைஞர் கருணாநிதியின் திமுக அரசு தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

exministe

மேலும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி டில்லியில் இருந்து வரும் போது நல்ல செய்தியுடன் வருவார் எனக் குறிப்பிட்ட அவர் கலைஞர் கருணாநிதியை போலவே அவரது மகன் ஸ்டாலினின் ஆட்சியும் ஊழலுக்காக கலைக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின்  இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் உருவாக்கி இருக்கிறது. ஆளுநர் வரும்போது டிஸ்மிஸ் என்ற செய்தியும் வரும் என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.