இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிக்கு, மரக்கிளையில் காத்திருந்த எமன்; நொடியில் சோகம்.!



in Trichy Couple Dies an Accident 01 March 2025 

 

மரம் முறிந்து விழுந்ததில் தம்பதி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள மணப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சுதர்சன் (வயது 40). இவரின் மனைவி புனிதா (வயது 37). தம்பதிகள் இருவரும் ஸ்ரீரங்கம் வந்தனர். பின் தங்களின் குழந்தைகளை லால்குடியில் இருக்கும் உறவினரின் வீட்டில் விட்டிருந்தனர். 

இதையும் படிங்க: திருச்சி: கல்லூரி விடுதி வளாகத்தில் சோகம்; மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

சனிக்கிழமை மீண்டும் ஸ்ரீரங்கம் நோக்கி திரும்பிக்கொண்டு இருந்தனர். இருசக்கர வாகனத்தில் இருவரும் வந்தபோது, அகிலாண்டபுரம், பனையடியான் கோவில் பகுதியில், சாலையோரம் இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்தது.

trichy

தம்பதி பலி

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தம்பதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது, உயரமின்னழுத்த கம்பி விழுந்தது.

இதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். மேலும், உயிரிழந்த தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

 

இதையும் படிங்க: திருச்சி: பேனர் வைத்தபோது சோகம்; புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி மரணம்.!