காவலரின் வாகனத்தில் அரசுப்பேருந்து மோதி சோகம்; திருச்சியில் துயரம்.. ஆயுதப்படை காவலர் பலி.!



in Trichy Biker Dies an Accident 

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாத்தலை, செங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். இவரின் மகன் விவேக் (வயது 32). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில், இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். 

நேற்று வழக்கம்போல பணியை முடித்துக்கொண்ட விவேக், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு இருக்கிறார். அச்சமயம், திருச்சி நம்பர் 1 டோல்கேட், உத்தமர் கோவில் இரயில்வே பாலத்தில் சென்றார். 

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிக்கு, மரக்கிளையில் காத்திருந்த எமன்; நொடியில் சோகம்.!

trichy

இருசக்கர வாகனம் - பேருந்து மோதி சோகம்

அச்சமயம், சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி பயணம் செய்த அரசுப்பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், விவேக் 25 அடி உயர பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். 

உயிருக்கு போராடியவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், மருத்துவமனையில் அவரை அனுமதி செய்தனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் காவல்துறையினர், விவேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: திருச்சி: கல்லூரி விடுதி வளாகத்தில் சோகம்; மாணவி தூக்கிட்டு தற்கொலை.!