புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
தலைதீபாவளிக்கு சொந்த ஊர் வந்த 19 வயது இளம்பெண் ஓடஓட விரட்டி குத்திக்கொலை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சம்பவத்தில் எவ்வித தொடர்பும் இல்லாத அப்பாவியான புதுமணப்பெண் படுகொலை செய்யப்பட்டார். பழிவாங்கவேண்டும் என ஒற்றை எண்ணத்துடன் சுற்றிவந்த நபரால் பெண்ணின் உயிர் பறிபோன துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி, சாதரகோன்விளை பகுதியில் வசித்து வருபவர் சிவன். இவரின் மகன் கோவிந்தன் (வயது 21). இவர் நேற்றுமுன்தினம் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த நிலையில், படுக்கப்பத்து பகுதியில் வசித்து வரும் இளைஞர், நண்பரை பார்க்க கோவிந்தனிடம் முகவரி கேட்டு இருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர் கழுத்தறுத்து கொலை., எலும்புக்கூடாக சடலம்.. போதை தகராறில் பயங்கரம்..!
முகவரி கேட்டு வந்த இளைஞரை கோவிந்தன் சத்தம்போட்டு விரட்டவே, அவர் அங்கிருந்து சென்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 20 பேரை அழைத்து வந்து கோவிந்தனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரின் குடும்பத்தினர் மட்டுமே இருந்ததால், இளைஞர்கள் குழு திரும்ப சென்றது. பின் மறுநாள் காலையில், படுக்கப்பத்து பகுதியில் வசித்து வரும் நபர்கள் சாதரகோன்விளை பகுதிக்கு வந்துள்ளனர்.
வாக்குவாதம் கொலை முயற்சியில் முடிந்தது
அச்சமயம், சாதரகோன்விளை பகுதியில் வசித்து வரும் போர்வெல் தொழிலாளி பெருமாளின் மகன் மணிகண்டன் (வயது 40) என்பவரை, கோவிந்தன், அவரின் தந்தை சிவன் சமாதானம் பேசவும் அழைத்து வந்துள்ளனர். சமாதானப்பேச்சுவார்தையில் வாக்குவாதம் எழவே, இந்த தகராறில் மணிகண்டன் சிவனை தாக்கி இருக்கிறார். இதில் ஆவேசமடைந்த கோவிந்தன், தனது வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து மணிகண்டனை வெட்டி இருக்கிறார்.
இதனால் கூட்டம் சிதறியோட, மணிகண்டன் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக கோவிந்தன், சிவன் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடையவே, அதிகாரிகள் கோவிந்தனை மட்டும் கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.
அப்பாவி இளம்பெண் கொலை
இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தனின் தங்கை முத்துலெட்சுமிக்கு (வயது 19), அழகப்பபுரம் பகுதியில் வசித்து வரும் வெயில்முத்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் தலைதீபாவளியை கொண்ட முத்துலட்சுமி தனது கனவ்வருடன் சாதரகோன்விளையில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு கணவருடன் வருகை தந்துள்ளார். மாட்டுப்பால் விநியோகம் செய்ய முத்துலட்சுமி நேற்று முன்தினம் காலை வெளியே சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த மணிகண்டனின் தம்பி தாஸ், இளம்பெண் முத்துலெட்சுமியை விரட்டி கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் முத்துலட்சுமி உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் தாஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: உசுரு போச்சே... மகன் திட்டியதால் ஆத்திரம்.!! போதை நபர் எடுத்த விபரீத முடிவு.!!