திருமணமான மகள்களுக்கு பெற்றோரின் சொத்தில் உரிமை: சட்ட விவரம் என்ன?
திருமணமான மகள்களுக்கு பெற்றோரின் சொத்தில் சட்டப்படி உரிமை உண்டு. இந்து வாரிசுரிமைச் சட்டம் அடிப்படையில் மகள்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. சொத்து பகிர்வு மற்றும் உயில் எழுதல் சட்ட விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்து வாரிசு உரிமை சட்டம்:
திருமணமான மகள்களுக்கு பெற்றோரின் சொத்தில் உரிமை உள்ளதா? என்பதில் பலர் குழப்பமடைகின்றனர். 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டபின், குடும்பச் சொத்துக்களில் மகள்களுக்கு மகன்களுக்கு நிகராக உரிமை உண்டு என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2005-ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தின் பேரில், திருமணமானவர் அல்லது இல்லாதவர் என பாகுபாடு இல்லாமல், பெற்றோரின் பூர்வீகச் சொத்துகளில் மகள்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "தந்தையின் ஓய்வூதியத்தில்.. மகளுக்கும் உரிமை.!" உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
உரிமை கோரலாம்:
தந்தை அல்லது தாய் உயில் எழுதி சொத்தை குறிப்பிட்ட நபருக்கு வழங்கியிருந்தால், அந்தச் சொத்துக்கான உரிமை அந்த எழுதியவரின் விருப்பப்படி செல்லும். ஆனால், உயில் இல்லாமல் ஒருவர் இறந்தால், அவரது நேரடி வாரிசுகள் எனப்படும் மகன்கள் மற்றும் மகள்களுக்கு சமமான பங்கு சட்டப்படி வழங்கப்படும். இதன் மூலம், திருமணமான மகளும் தனது பங்கிற்காக உரிமை கோர முடியும்.

உயில் இல்லை என்றால் உரிமை கோரலாம்:
கூட்டுக் குடும்பச் சொத்துகள் பிரிக்கப்பட்ட பிறகு, மகளின் பங்கு தனிப்பட்ட சொத்தாக மாறி, அவளுக்கு முழு அதிகாரம் உண்டு. அவள் விரும்பினால் அதை விற்கவும் அல்லது மாற்றவும் முடியும். அவள் உயில் எழுதாமல் இறந்தால், அந்தப் பங்கு சட்டப்படி அவரின் வாரிசுகளுக்கு செல்லும். இதே விதத்தில், தாய் சம்பாதித்த சொத்தையும் அவளுக்கு முழு உரிமை உண்டு, ஆனால் உயில் எழுதியிருந்தால் அதற்கு மற்ற வாரிசுகள் உரிமை கோர முடியாது.
சட்ட வல்லுனரை நாடலாம்:
திருமணமான மகள்கள் தங்கள் பெற்றோரின் பூர்வீகச் சொத்துகளில் சட்டப்படி சம உரிமை பெறும், பூர்வீகச் சொத்து பகிர்வில் எந்த விதமான வேறுபாடும் கிடையாது. சொத்து பிரிப்பு, உயில் எழுத்து மற்றும் வாரிசு அடிப்படையில் இந்த உரிமைகள் நடைமுறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. எனவே, எந்த சந்தேகமோ குழப்பமோ இருந்தால், குடும்ப சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்.