தென்காசி: போதையில் படியில் தொங்கியபடி வம்பு.. நடத்துனரை கத்தரியால் குத்திய 17 வயது சிறுவன்.!



in Tenkasi Govt Bus Conductor Attacks by minor Boy 

 

தென்காசி மாவட்டத்தில் உள்ள துலுக்கநத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், இன்று தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, சிறுவன் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

போதை மிதப்பில் படிக்கட்டில் நின்றபடி அவர் பயணிக்க, இதனை கவனித்த பேருந்து நடத்துனர் மாடசாமி சிறுவனை கண்டித்து இருக்கையில் அமரும்படி கூறியுள்ளார். இதனை கேட்காத சிறுவன், தொடர்ந்து அவதூறான வார்த்தை பேசி ரகளை செய்துள்ளார். 

இதையும் படிங்க: தென்காசி: 18 வயது சிறுவனுக்கு எமனான நாய்; திடீரென குறுக்கே புகுந்ததால் விபரீதம்.. கண்ணீர் சோகம்.!

Tenkasi

சிறுவன் கைது

இதனால் சிறுவனை பேருந்தின் நடத்துனர் பாவூர்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இந்த விஷயத்தில் ஆத்திரமடைந்த சிறுவன், அதே பேருந்து மீண்டும் வரும் வரையில் அங்கேயே காத்திருந்துள்ளார். 

பேருந்து மீண்டும் பாவூர்சத்திரம் வந்தபோது, பேருந்தின் நடத்துனரை சிறுவன் கத்திக்கோலால் குத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் காயமடைந்த பேருந்து நடத்துனர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தென்காசி: பட்டா மாத்தணுமா? 10 ஆயிரம் கொடுப்பே.. கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது.!