டிச. 20, 21ம் தேதிகளில் தென்தமிழகத்தில் கனமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

டிச. 20, 21ம் தேதிகளில் தென்தமிழகத்தில் கனமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!


in Tamilnadu Dec 20 21 Date Rain Announced by India Meteorological Center

 

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தெந்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்திற்கு பல புயல்கள் உருவாகி மழை கிடைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு என்பது பெருமளவு இல்லை. 

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நிலை கொண்டுள்ளது. 

tamilnadu

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடலை நோக்கி நகரும். இதனால் டிசம்பர் மாதத்தின் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.